விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து
விமர்சனம்
டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரில் எல்லாவற்றையும் இணையம் மூலம் செய்யுங்கள் என்று அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவற்றால் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறது சக்ரா. இராணுவ வீரராக அட்டகாசமாக அறிமுகமாகிறார் விஷால். அதன்பின் படம் முழுக்க ஓட்டம்தான். ஒரு விசாரணை அதிகாரி வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தி இருக்கிறார்.
வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சந்தானம்.அவர் பெயர்தான் பாரிஸ் ஜெயராஜ். அவருக்கு, நாயகி அனைகா சோட்டி மீது காதல். சில பல போராட்டங்களுக்குப் பின் அவரும் சந்தானத்தைக் காதலிக்கிறார். இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் கண்டிராத ஒரு விநோத சிக்கல் அந்தக்காதலுக்கு வருகிறது. கடைசியில் என்னவாகிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். சென்னைத்
நாயகன் தினேஷுக்கு நாயகி தீப்தியைப் பார்த்ததும் காதல். ஆனால் நாயகிக்கோ காதல், திருமணம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லை. அதனால் வேலைக்காக இலண்டன் சென்றுவிடுகிறார். நடுத்தர வர்க்க தினேஷும் தீப்தியைத் தேடி நண்பர்களுடன் இலண்டன் செல்கிறார். அங்கும் தினேஷை நிராகரிக்கிறார் தீப்தி. அதோடு தினேஷின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஓர் அதிரடி முடிவெடுக்கிறார். அம்முடிவு என்ன?
கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ள ‘எதிர்பாரா முத்தம்’,ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘அவனும் நானும்’,வெங்கட்பிரபுவின் ‘லோகம்’,நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘ஆடல்-பாடல்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக வருவதுதான் குட்டி ஸ்டோரி. இவற்றில் முதலில் வருவது கெளதம்மேனனின் எதிர்பாராமுத்தம். கெளதம்மேனன் அமலாபால், ரோபோ சங்கர்,
திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல். வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்) பார்கவியின் (ஐரா) பதின்பருவக் காதல் தாடி (வெற்றி), சலீமாவின் (மும்தாஜ்சர்கார்) இளம்பருவக் காதல்,
ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று போகிறார்கள். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம். வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா அதிரடி ஆளாக அருள்நிதி என்று இருவருக்கும் தனித்தனி பாதை போட்டுவிட்டார்கள்.
ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி? இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப். முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை. காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இக்கொடும்
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பூமிநாதன் ( நாயகன் ஜெயம்ரவி) நாசா விஞ்ஞானியாகி செவ்வாய் கிரகம் செல்லும் குழுவுக்கு தலைமையேற்கிறார். இடையில் கிடைக்கும் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை, விவசாய நிலங்களின் நிலை, நிலத்தடி நீரின் நிலை ஆகியன கண்டு பேரரதிர்ச்சியாகிறார். அவற்றைச் சரி செய்ய முயல்கிறார்.