தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து
செய்திகள்
கிஷோர், சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் மூன்று. ஒன்று ஹரி இயக்கத்தில் அருவா. அப்படம் நடக்கவில்லை. இரண்டாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல். அப்படத்தின் படப்பிடிப்பும் எப்போது என்று சொல்லப்படவில்லை. அதன்பின் அறிவிக்கப்பட்ட படம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம். அப்படம் பற்றிய அறிவிப்பு 2020 அக்டோபர்
அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்துவருகிறார்.. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர்
2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தை தமிழில் எடுக்கவிருக்கின்றனர். இதன் தமிழ் மொழிமாற்று உரிமையை இயக்குநர்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பதற்காக ஒரு தனியார் தொலைக்காட்சியை அணுகியிருக்கிறார்கள். அவர்களும் விலை சொல்லுங்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து
2021 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதற்கு முன்பு, மாஸ்டர் திரைப்படக்குழுவினர் ஈஸ்வரன் படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கவிடாமல் செய்கின்றனர், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லை, மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகார் அடிப்படையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம்
2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம்,