September 18, 2020
சினிமா செய்திகள்

இந்தியா முழுக்க நடக்கும் பிகில் வேலைகள் – இறுதிநேர பரபரப்பு

விஜய் நடிக்கும் பிகில் படம், தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இப்படம் தணிக்கைக்குழுவினரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அது கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள்  இடம்பெறவிருக்கின்றனவாம்.

இன்னும் 500 ஷாட்ஸ்களுக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்யவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதனால் சென்னையில் மட்டும் வேலை செய்தால் அது முடியாது என்பதால் இந்தியா முழுக்க உள்ள கிராஃபிக்ஸ் நிறுவனங்களில் அந்த வேலைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இதனால் படக்குழுவினர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பறந்து சென்று வந்து கொண்டிருக்கிறார்களாம்.

இதனால் செலவு அதிகமாகிறது என்றாலும் குறித்த நேரத்துக்குள் வேலை முடிய வேண்டும் என்கிற பரபரப்புடன் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts