October 29, 2020
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 பங்கேற்பாளர் குறித்து கமல் வைத்த ஒரு கோரிக்கை

2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்கவிருக்கிறது.

ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான அறிமுகக் காணொலியை கமல் வெளியிட்டு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உறுதி செய்தார்.

அப்போதிருந்து பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என்று ஏராளமான பெயர்கள் சொல்லப்பட்டுவருகின்றன.

ஆனால் இதுவரை பங்கேற்பாளர்கள் பட்டியலுக்கு இறுடிவடிவம் கொடுக்கப்படவில்லை என்றும் கடைசி நேரம் வரை மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும் என்று சொல்கிறார்கள்.

அதேசமயம், பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் பட்டியல் குறித்து கமல் தரப்பிலிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
அதை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு ஏற்றுக் கொண்டதாம்.

அது என்ன? பிக்பாஸ் குழுவில் இம்முறை கண்டிப்பாக ஒரு அரவாணி இடம் பெறவேண்டும் என்று கமல் தரப்பு கோரியதாம்.

அதை ஏற்றுக்கொண்ட குழுவினர் ஒரு அரவாணியைத் தேர்வு செய்திருகிறார்களாம். பங்கேற்பாளர்கள் பட்டியல் வெளியாகும்போது அவர் யார் என்கிற விவரம் வெளியாகும்.

Related Posts