சினிமா செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் – இதுதான் காரணமா? அதிர்ச்சி தரும் கருத்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை சென்ற சாண்டி மற்றும் முகேன் ராவ் ஆகிய இருவரில், யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நேரம் இருந்த நிலையில்,

அக்டோபர் 8 மாலை மேடையில் தோன்றிய கமல் சில விளையாட்டுகளை காட்டி சிறிது நேர பரபரப்பிற்கு பின் முகேன் ராவ் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று கையைத் தூக்கிக் கத்தினார்.

உடனே போட்டியாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்ய சாண்டி முகேனை தூக்கிச் சுற்றினார். அதன் பின்னர் முகேனின் குடும்பத்தினர்கள் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார்கள், முகேன் குருநாதா என கத்திக் கூச்சலிட்டார்.

சிறிது நேரம் அரங்கமே ஆரவாரமாக திருவிழா போல் காட்சியளித்தது. கோப்பையை முகேன் ராவிடம் ஒப்படைத்தார் கமல்.

இதைத்தொடர்ந்து பேசிய முகேன் ராவ் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மலேசியா மக்களால் தான் இங்கு நான் நிற்கிறேன் என நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த பிக்பாஸ் ஷோ எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். என மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இறுதிப் போட்டியில் மட்டும் முகேனுக்கு 7 கோடியே 64 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதே போன்று சாண்டி 5.83 கோடி வாக்குகள் பெற்றார் என்றும், ஒட்டு மொத்த வாக்குகள் 20 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருகிற கருத்துகள்….

பிக்பாஸ் டைட்டில் வின்னராகியிருக்கிறார் முகேன்.இல்லையில்லை வின்னர் ஆக்கப்படிருக்கிறார்.

சீசன் -3 வின்னர் பரிசு வெளிநாட்டினருக்கே கிடைக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். இதனை முடிவு செய்தது ஓட்டுப் போட்ட மக்கள் அல்ல. விஜய் டிவிதான்.

உலகத் தமிழர்களையும் ஈர்க்கவே பிக்பாஸில் இம்முறை இலங்கை மற்றும் மலேசியாவிலிருந்து போட்டியாளர்களைக் களமிறக்கியது. அந்நாட்டு மக்களும் பார்ப்பார்கள் என்பதுதான் விஜய் டிவியின் டி.ஆர்.பி. டெக்னிக்.

ஏற்கனவே, இரண்டுமுறை டைட்டில் வின்னரானது உள்ளூர் தமிழர்கள். இம்முறை உலகத்தமிழர். கதை, திரைக்கதை, வசனம் ஏ டூ செட் எல்லாமே விஜய் டிவிதான். இதில், மக்களையும் சேர்த்து நடிக்கவைத்ததுதான் விஜய் டிவியின் வியாபார வெற்றி

என்கிற கருத்தே அதிகம் வெளிப்படுகிறது.

Related Posts