Uncategorized சினிமா செய்திகள்

கேஜிஎஃப் 2 படத்தால் 30 கோடி இழப்பு – பீஸ்ட் படக்குழு அதிர்ச்சி

விஜய் பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

எஃப் எம் எஸ் எனப்படும் பன்னாட்டுத் திரையிடும் உரிமையை கருணாமூர்த்தியின் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் பெற்றிருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் விஜய்யின் அடுத்த படத்தைத் தயாரிப்பவருமான தில்ராஜு வெளீயிடுகிறார்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் கேரள உரிமை விற்பனையில் கடும் இழுபறி ஏற்பட்டதாம்.

கேரளாவில் விஜய் படம் வெளியாகிறது என்றால் பெரும்பாலான திரையரங்குகளில் அந்தப்படத்தை வெளியிடுவார்கள்.பெரிய கொண்டாட்டமாகவும் இருக்கும் என்பார்கள்.

இந்தமுறை அது மாறிவிட்டது. அதற்குக் காரணம் கேஜிஎஃப் 2 படம் என்கிறார்கள். பீஸ்ட் படம் உலகம் முழுக்க வெளியாகும் எல்லா இடங்களிலும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ்ப்பதிப்பும் வெளியாகிறது. அப்படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏப்ரல் 14 அன்று வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2 படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை லிஸ்டின் என்பவர் பெற்றிருக்கிறார். அவர், கேரளாவில் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அப்படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டுவைத்திருக்கிறாராம்.

இந்தநிலையில், பீஸ்ட் படத்தின் கேரள உரிமை விலை பத்துகோடி என நிர்ணயித்து வியாபாரத்தைத் தொடங்கினால் ஒருவரும் வாங்க முன்வரவில்லையாம். அதற்குக் காரணம், கேஜிஎஃப் 2 படத்துக்குப் போக மீதியுள்ள சுமார் 150 க்கும் குறைவான திரையரங்குகளில்தான் பீஸ்ட் படத்தை வெளியிட்டாக வேண்டும் அப்படிச் செய்யும்போது போட்ட பணம் நிச்சயம் வராது என்பதால் யாரும் முன்வரவில்லையாம்.

நிலைமையை உணர்ந்த சன்பிக்சர்ஸ் விலையை 7.50 கோடி எனக் குறைத்திருக்கிறது. அதற்கும் யாரும் வரவில்லையாம்.

கடைசியில் வேறுவழியில்லாமல் கேஜிஎஃப் 2 படத்தை வெளியிடும் லிஸ்டினிடமே பீஸ்ட் பட வெளியீட்டு உரிமையைக் கொடுத்துவிட்டார்கள்.அவரிடம் கொடுத்தால்தான் கேஜிஎஃப் 2 க்கு ஒப்பந்தம் செயத திரையரங்குகளில் கொஞ்சம் பீஸ்ட்டுக்கும் கிடைக்கும் என்கிற நிலை.அதனால் அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதன் விலை சுமார் ஆறு கோடி என்கிறார்கள்.

அதாவது சொன்ன விலையைவிட சுமார் நான்குகோடி குறைவாக வியாபாரம் நடந்திருக்கிறது.

கேரளா மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, இந்தி மற்றும் பன்னாட்டு விநியோக உரிமை ஆகியவற்றிலும் இதேசிக்கல் இருந்ததென்கிறார்கள். இதனால் மொத்த விற்பனையில் சுமார் முப்பதிலிருந்து முப்பத்தைந்து கோடி குறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

இதன்காரணமாக விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

Related Posts