Home Articles posted by cadmin
சினிமா செய்திகள்

ஆர்யா படப்பெயரில் ஆச்சரியம் கொடுக்கவிருக்கும் முத்தையா – உண்மை என்ன?

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாகப்
செய்திக் குறிப்புகள்

நேரடி இணையவெளியீட்டுக்கு பாக்யராஜ் எதிர்ப்பு சீமான் ஆதரவு – ஜீவி 2 படவிழா தொகுப்பு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. 2௦19 இல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத்தே இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன்
செய்திக் குறிப்புகள்

சீதாராமம் படம் உண்டாக்கிய விளைவு – துல்கர் சல்மான் மகிழ்ச்சி

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, இரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘சீதா
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியின் கொலை பட முன்னோட்ட வெளியீட்டுவிழா – தொகுப்பு

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் (Lotus Pictures) உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கொலை. பாலாஜி கே.குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக மீனாட்சி செளத்ரி மற்றும் ரித்திகாசிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன், இசை கிரிஷ்
சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தின் மூன்றாவது வில்லன் இவர்தான்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார். அப்படத்தை மாஸ்டர்
விமர்சனம்

விருமன் – திரைப்பட விமர்சனம்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு சுவாமிமலை. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான்
விமர்சனம்

கடமையைச் செய் – திரைப்பட விமர்சனம்

கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழகான மனைவி யாஷிகா ஆனந்த். ஓர் அன்பான குழந்தை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு வேலை இழப்பு.  அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரர் வேலைக்குச் செல்கிறார்.  அந்த அடுக்குமாடிக்
விமர்சனம்

லால்சிங்சத்தா – திரைப்பட விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அப்பா இல்லாமல் அம்மாவின் வளர்ப்பில் வளரும் லால்சிங்சத்தா என்கிற சாதாரண இளைஞனின் கதையைச் சொல்லி அதனூடே இந்திய ஒன்றிய அரசியலையும் தம் விருப்பத்துக்கேற்ற வகையில் இக்காலத்தவர்க்குச் சொல்லியிருக்கும் படம் லால்சிங்சத்தா. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் எழுதிச் செல்கின்றது ஒரு பறவையின் வாழ்வை எனும் அழியாப் புகழ்பெற்ற
விமர்சனம்

எமோஜி – 18+ இணையத் தொடர் விமர்சனம்

காதல், கல்யாணம், கற்பு ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்மத்தியதர வர்க்க இளைஞர்கள் யுவதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்: என்பதை வெளீப்படுத்தி அதிர வைத்திருக்கிறது எமோஜி இணையத் தொடர். ஒருமுழுநீளத் தொடரின் முழுமையான நாயகனாகியிருக்கிறார் மகத்ராகவேந்திரா.எதிலும் ஓர் அலட்சியத்துடன் செயல்படக்கூடிய உயர்மத்தியதர வர்க்க இளைஞன் வேடத்தை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார் மகத். 
சினிமா செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடந்த கடைசிநேர அதிரடி மாற்றம்

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மற்ற எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால்,