சினிமா செய்திகள்

அசுரவதம் புரிந்த சசிகுமார் அடிவயிறு கலங்கும் விநியோகஸ்தர்கள்

சசிகுமார் கதாநாயகனாக நடித்த அசுரவதம் ஜூன் 29 அன்று வெளியானது.

இப்படம் வெளியான நாளிலேயே அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்கின்றனர்.

வழக்கமாய் சசிகுமார் படத்துக்கு இருக்கும் வரவேற்பு கூட இந்தப்படத்துக்கு இல்லை என்று சொல்லும் விநியோகஸ்தர்கள், அதனால் மிகப்பெரும் நட்டத்தைச் சந்தித்து இருப்பதாகச் சொல்கின்றனர்.

இப்படத்தின் கோவை விநியோக உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

மினிம்ம் கியாரண்டி அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இப்படம் அவ்வளவு வசூல் செய்யாது என்றும் அதிகபட்சமாக இருபத்தைந்து இலட்சம் வசூலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் சுமார் எழுபத்தைந்து இலட்சம் நட்டம ஏற்படும் என்பதால் விநியோகஸ்தர் கதிகலங்கிப் போயிருக்கிறாராம்.

கோவை மட்டுமல்ல தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை என்பதால் இப்படம் வாங்கிய அனைவருமே கலக்கத்தில் இருக்கின்றனராம்.

Related Posts