September 23, 2020
சினிமா செய்திகள்

ஆர்யா கேட்ட சம்பளம் அதிர்ந்த சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது.

அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும்

அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவிடமும் பேசி வருகின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஆர்யா ஐந்து கோடி சம்பளம் கேட்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சுந்தர்.சி அதிர்ச்சியடைந்திருக்கிறாராம்.

சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதியானதும் முறையான அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

Related Posts