சினிமா செய்திகள்

ஆர்யா சாயிஷா திருமண அழைப்பு – படம் மற்றும் விவரங்கள்

ஜம்சத் என்கிற இயற்பெயரைக் கொண்டவர் ஆர்யா. 2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார்.

அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது.

இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

கொஞ்ச காலம் நயன்தாராவின் காதலர் என்றும் சொல்லப்பட்டவர்.

ஆனால் அவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றாகிப்போயின.

இப்போது உண்மையிலேயே அவர் காதலில் விழுந்து அது திருமணம் வரை வந்திருக்கிறது.

அவருடைய காதலி நடிகை சாயிஷா.

கஜினிகாந்த் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது காதல் உண்டானதாம்.

இப்போது சூர்யாவின் காப்பான் படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.

Arya invite

Arya invite

இவர்கள் இருவருக்கும் மார்ச் 10,2019 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.

ஐதராபாத்தில் நடக்கவிருக்கும் திருமணம் மற்றும் வரவேற்புக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருக்கிறாராம்.

மொத்தமே நூறு அழைப்பிதழ் மட்டுமே கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதில் ஆர்யா என்று பெயர் போடாமல் அவருடைய நிஜப்பெயரான ஜம்சத் என்கிற பெயர் உள்ளது.

Related Posts