February 17, 2020
Uncategorized

அரண்மனை 3 படப்பிடிப்புக்குக் கிடைத்த புதிய அரண்மனை

அரண்மனை, அரண்மனை ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்ற படங்கள். சுந்தர்.சி இயக்கி நடித்த அப்படங்கள் வெற்றி பெற்றதன் விளைவு இப்போது அப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது.

அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும்

அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கவிருக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த ஒரு பெரிய அரண்மனையைத் தேடி வந்தார்களாம். இந்தியாவிலுள்ள பல மாநிலங்களிலும் இடம் தேடினார்களாம்.

கடைசியில் குஜராத்தில் ஒரு அரண்மனையைப் பிடித்துவிட்டார்களாம். அந்த அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதாம். அங்கே பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.

பிப்ரவரி 23 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts