சினிமா செய்திகள்

அரண்மனை 3 படத்துக்கு சுந்தர்.சி சொன்ன விலை – தாமதமாகும் வெளியீடு

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷிஅகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

கொரோனா சிக்கலுக்கு முன்பு அதாவது 2020 பிப்ரவரியில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கலில் படப்பிடிப்பு தடைபட்டது.

சிக்கல் நீங்கி படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியதும் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து முடிந்தது.

டிசம்பர் மாதத்திலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதற்குப் பிறகான வேலைகளும் முடிவடைந்து வெளீயீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

படம் எப்போது வெளியாகும்? என்கிற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதற்குக் காரணம், படத்தை மொத்தமாக வியாபாரம் செய்துவிட்டு பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்கலாம் என்று சுந்தர்.சி முடிவெடுத்திருக்கிறாராம். அதேசமயம் அவர் சொல்லும் விலைக்கு இப்படத்தை வாங்க யாரும் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.

எவ்வளவு?

அவர் இருபத்தைந்து கோடி விலை சொல்கிறாராம். திரையரங்கு, இணையம், தொலைக்காட்சி ஆகிய எல்லா உரிமைகளுக்கும் சேர்த்து இந்த விலை சொல்லப்பட்டாலும் அவ்வளவு பணத்தைக் கொடுக்க யாரும் முன்வராததால் வியாபாரம் தாமதம் ஆகிறதாம். அதனால் வெளியீட்டுத் தேதியும் சொல்லாமல் இருக்கிறார்களாம்.

Related Posts