சினிமா செய்திகள்

அஜீத் விஜய் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மறைவு

எம்ஜிஆர் ரஜினி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நாயகர்களை வைத்து படங்கள் தயாரித்த நிறுவனம்
விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்.

அந்நிறுவனத்தை நிறுவியவர் பி.நாகிரெட்டி. அவருடைய இளைய மகனும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்.

பி.வெங்கட்ராம ரெட்டி எனும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75.

அவரது மனைவி பெயர் பி.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி ,அர்ச்சனா ரெட்டி.

மறைந்த வெங்கட்ராம ரெட்டி, விஷால் நடித்த தாமிரபரணி,தனுஷின் படிக்காதவன், வேங்கை,அஜீத் நடித்த வீரம்,விஜய்யின் பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார்.

இவரது 6வது படமான சங்கதமிழன் படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Posts