சினிமா செய்திகள்

அஜீத்தை குற்றம் சொன்ன வடிவேலு – முளைக்கும் புதிய சர்ச்சை

அண்மையில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு தமிழில் பேட்டி கொடுத்திருந்தார் வடிவேலு.

அதில் இயக்குநர் ஷங்கர் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதோடு கதாநாயகர்களைக் கிண்டல் செய்வது குறித்தான கேள்விக்கு, அதில் என்னைவிடச் சிறந்தவர் கவுண்டமணி அய்யாதான் படத்தில் மட்டுமின்றி வெளியிலும் ஹீரோக்களை கலாய்ப்பதில் அவர் சிறந்தவர்.

நான் படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப, ஏண்டா டேய் … என்று சொல்லிவிட்டுப் போவேன்.

இதை வைத்தே சிலர் எனக்கும்
ஒரு ஹீரோவுக்கும் பிரிவினை உண்டாக்கிவிட்டனர். நான் அந்த ஹீரோ பேர் சொல்ல விரும்பல. அவரிடம், என்னங்க வடிவேலு உங்கள வாடா போடான்னு பேசறாரு என்று போட்டுவிட அவரும் அதைக் கேட்டுக்கொண்டார் என்று சொல்லியிருந்தார் வடிவேலு.

அவர் பெயர் சொல்லவில்லையென்றாலும் அவர் குறிப்பிட்ட ஹீரோ அஜீத் என்றும்
2002 ஆம் ஆண்டு அஜீத் நடித்த ராஜா படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இந்தச் சிக்கல் உண்டானதென்றும் சொல்கிறார்கள்.

அதன்பின் அஜீத்தும் வடிவேலுவும் சேர்ந்து நடிக்கவில்லை.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து வடிவேலு அதை வெளிப்படுத்தியதும் அஜீத்துக்கு எதிர்ப்பாக பலர் கருத்து சொல்லி வருகின்றனர்.

எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பாருங்கள்.

Related Posts