சினிமா செய்திகள்

பெரிய நிறுவனத்தை நிராகரித்த அஜீத்

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அப்படத்தைத் தயாரிக்கிறார்.

அந்தப்படத்துக்கு அடுத்து அவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று சொல்கிறார்கள்.

அதேசமயம் இன்னொரு பக்கம், தற்போது இந்தியன் 2, பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் லைகா நிறுவனம், அஜீத்தின் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்து அவரை அணுகியதாம்.

அஜீத் சொல்லும் இயக்குநரை ஒப்பந்தம் செய்யவும் சம்மதம் என்று அந்நிறுவனம் சொல்லியிருக்கிறது.

ஆனால், அஜீத் லைகா நிறுவனத்துக்குப் படம் நடிக்க முடியாது என்று கறாராக மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

அந்நிறுவனம் பெரும் பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது என்று சொல்லப்படுவதாலேயே அஜீத் நடிக்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.

Related Posts