சினிமா செய்திகள்

ஹாரிஸ் வேண்டாம் அனிருத்தே இருக்கட்டும் – படக்குழு முடிவு கமல் ஒப்புதல்

சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது.

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் எஸ்கே 21 என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு அனிருத், டி.இமான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் அயலான் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ்ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது விக்ரம் படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் சந்திப்பு அடிக்கடி நடந்துகொண்டிருக்கிறது.

அதன்விளைவு, சிவகார்த்திகேயனின் 21 ஆவது படத்துக்கு ஹாரிஸ் வேண்டாம் அனிருத்தே இசையமைக்கட்டும் என்று படக்குழுவினர் பேசத் தொடங்கினார்களாம்.இந்தப்படத்துக்கு அனிருத் இசை என்பதற்கு கமலும் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts