செய்திக் குறிப்புகள்

கன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்

கன்னடத்தில் 2015 ஆம் ஆண்டு வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். அதைத்தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் நிறையப்படங்கள் நடித்து வருகிறார்.

புகழ்பெற்ற் நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்குப் படவுலகில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டுமே 275 கோடி என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இளம் முன்னணி நடிகர் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள மேஸ்ட்ரோ திரைப்படம் விரைவில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்தநிலையில் தற்போது முதன்முதலாக இந்தியிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா நடேஷ். ஆனால் திரைப்படத்தில் அல்ல.திரைப்படங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்று வரும் வெப்சீரிஸ் எனப்படும் இணையத்தொடரில்.

இந்தித் திரையுலக முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் இணையத்தொடர் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாகி இருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் முதல் வெப்சீரிஸும் இதுதான்.

Related Posts