சினிமா செய்திகள்

முதன்முறையாக ரஜினியுடன் நடிக்கிறார் சூரி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் காமெடி நடிகர் சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 168 படத்தை சிவா இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு டிசம்பரில் துவங்குகிறது. அதனால் நடிக-நடிகைகள் தேர்வு மும்மரமாக நடந்துவருகிறது.

ஏற்கெனவே இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார். முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சூரி.

Related Posts