September 18, 2020
சினிமா செய்திகள்

ட்விட்டரில் இணைந்த நடிகர் மயில்சாமி – காரணம் என்ன?

நடிகர் மயில்சாமி சமூகவலைதளமான ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.ட்விட்டர் கணக்கு தொடங்கி ஆறு பேரைப் பின் தொடர்கிறார்.அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், விவேக், இசையமைப்பாளர் தினா ஆகிய ஆறு பேரை அவர் பின் தொடர்கிறார்.

தற்போதைய சமூக அவலங்கள் கண்டு கொதிக்கும் அவர் தன் கோபங்களையும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தவுமே இந்தக் கணக்கைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

ஏனெனில், சம்பிரதாய அறிமுகத்துக்குப் பின் அவர் வெளீயிட்டுள்ள ட்வீட்டில்,இந்த கொரோனா காலத்தில் மக்கள் கடன் சுமையால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் ஏதாவது வழி வகை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

நேற்று மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல்பாலாஜி குறித்த இரங்கலில்,வடிவேல் பாலாஜி உன் மறைவு எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தக் கண்ணீர் இன்று மட்டும் அல்ல. இனி டிவியில் நீ வரும் போதெல்லாம் சிரிப்போடு அழுகையும் வரும்.சிரிக்க வைத்த ஆன்மா சாந்தியடையும்

என்று குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் சமுதாய அரசியல் விமர்சனச் சூடுகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

Related Posts