February 17, 2020
சினிமா செய்திகள்

அஜீத் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்

சனவரி 2019 இல் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், அஜீத் நடிக்கும் புதியபடத்தின் (நேர்கொண்டபார்வை) அறிவிப்பை வெளியிட்டார்.

அதோடு, அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது என்று சொல்லியிருந்தார்.

நேர்கொண்டபார்வை படவெளியீடு தள்ளிப் போனதால், அடுத்த படத்தின் தொடக்கமும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட்டுக்குத் தள்ளிப்போனது.

ஜூலை 29 ஆம் தேதி, எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம் (அஜீத் 60) ஆகஸ்ட் மாத இறுதியில் பூசையுடன் தொடங்கவிருக்கிறது என்று போனிகபூர் அறிவித்தார்.

எச்.வினோத் இயக்கம் அஜீத் நடிப்பு ஆகியன மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப்படத்தில் இசைய்மைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இணையவிருக்கிறார் என்றொரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவியிருக்கிறது.

ஏற்கெனவே அஜீத் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வரலாறு ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts