October 29, 2020
சினிமா செய்திகள்

800 படத் தயாரிப்பாளரின் அறிக்கை பொய் – அம்பலப்படுத்திய நடிகர்

தமிழினத் துரோகியாக இன்றுவரை இருக்கும் மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதை 800 என்கிற பெயரில் படமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்சேதுபதி அப்படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலையை ஆதரித்தவர் என்பதால் அந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் அப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் ஓர் அறிக்கை வெளீயிட்டது. அதில், முத்தையா முரளிதரன்‌ வாழ்க்கை வரலாற்றில்‌ விஜய்‌ சேதுபதி நடிக்க இருக்கும்‌ ‘800’ திரைப்படம்‌ பல்வேறு வகையில்‌ அரசியல்‌ ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்‌. ‘800’ திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் அதுவும் பொய் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் டி.ஜே.அருணாசலம்.

அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்துப் புகழ்பெற்றிருக்கும் அவர் ஆங்கில நாளேடொன்றுக்கு அளித்த பேட்டியில்….

நான் இந்தியாவில் இருந்தபோது, ​​800 படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை அணுகியிருந்தனர். திரைப்படத் தயாரிப்பாளரை நான் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன், அவர் 800 படத்தின் முழுக்கதையையும் சொன்னார். இந்த படத்தில் முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நானும், மூத்த வயது முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி சாரும் நடிப்பதாக இருந்தது.

இந்தப் படத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போர்வாழ்க்கையும் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் அம்மா ஈழத் தமிழச்சி தான். போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன,அவற்றைப்பற்றிப் பேசும் அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை. எனவே, நான் அவர்களிடம் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னேன்.

என்று சொல்லியிருந்தார்.

இதன் மூலம் இந்தக்கதையில் ஈழதமிழர்களின் போராட்ட அரசியல் இருக்கிறதென்றும் அதுவும்
கொச்சைப்படுத்தப் பட்டிருக்கிறதென்றும் உறுதியாகியிருக்கிறது.

Related Posts